பொழுதுபோக்குசினிமா

வடிவேலுடன் இணைகிறார் ஷிவாங்கி

Share

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் வைகைப்புயல் வடிவேலு.

நகைச்சுவை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் தனது வசனங்களால், உடல் அசைவுகளாலும் அனைவரையும் கட்டிப்போட்டவர் வடிவேலு.

சில வருடங்களாக அவரை திரையில் காணவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மன்னனாக தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருப்பவர் வடிவேலு.

sivanki 02

இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக படங்களில் ஒப்பந்தமாகாது இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது இயக்குநர் சுராஜுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் வடிவேலு. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என டைட்டில் இடப்பட்டுள்ளது. படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

sivanki 03

அண்மையில் வெளியாகிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பறை பற்றுள்ள நிலையில், தபோது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் பூஜை தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளன.

இந்த மடத்தில் வைகைப்புயலுடன்ம் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூப்பர் சிங்கர் பாடகி ஷிவங்கியும் இணைந்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் முனிஷ்காந்த், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

படத்தின் புஜையில் இவர்கள் கலந்து கொண்ட படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

sivanki 04

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனது இயல்பான நகைச்சுவையால் அனைவர் மனதையும் கொள்ளைகொன்சவர் ஷிவாங்கி. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷிவாங்கி. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தற்போது ஷிவாங்கி வைகைப்புயலுடன் இணைந்துள்ளமை ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வடிவேலுவின் இம்சை அரசன் கெட்டப்பிலும், காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் வடிவேலு கெட்டப்பிலும் கலக்கியவர் ஷிவாங்கி.

தற்போது திரையில் வடிவேலுவுடன் இணைத்துள்ளமை ரசிக்கலரால் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...