sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

Share

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சந்தியாவையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

‘டிஸ்யூம்’, ‘வல்லவன்’ உட்படப் பல தமிழ்ப் படங்களில் நடித்த சந்தியா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.

சந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்த சந்தியா, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.

முதற்கட்டமாக, ஒரு வெப் தொடர் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ‘காதல்’ சந்தியா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தத் தொடரில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, பாடினி குமார் உள்படப் பலர் நடிக்கின்றனர்.

மேலும், இந்த வெப் தொடரைத் தொடர்ந்து, ஒரு புதிய தமிழ்ப் படத்தில் ‘காதல்’ சந்தியாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...