இலங்கையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் லொஸ்லியா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கியவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன. இவரின் முதல் படமான பிரண்ட்ஷிப் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தர்சனுடன் இணைந்து நடித்த கூகுள் குட்டப்பா விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
தொடர்ந்து படங்களில் கர்வம் செலுத்தி வரும் லொஸ்லியா அஷ்வினுடன் இணைந்து ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார். இந்த பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது.
அடிக்கடி புகைப்படங்கள், விடீயோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது திருமண கெட்டப்பில் காணப்படும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#cinema
Leave a comment