தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை லட்சுமி ராய்.
“தாம் தூம்“, “காஞ்சனா“, “அரண்மனை“, “மங்காத்தா“ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர்.
அண்மையில் லட்சுமி ராய் நடிப்பில் வெளியான “சிண்ட்ரெல்லா“ திரைப்படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது டுபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள லட்சுமி ராய், அங்குள்ள ‘Dolphinarium’ க்கு சென்று டால்பின்களுடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார்.
டால்பின்களுடன் நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக லட்சுமி ராய் கன்னத்தில் டொல்பின் முத்தம் கொடுக்கும் புகைப்படமும் காணப்படுகிறது
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
#Cinema
Leave a comment