எதிர்பார்ப்பை கூட்டும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’

WhatsApp Image 2021 09 12 at 2.51.04 AM

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சிங்கிள் ரக் தொடர்பான செய்தி வெளிவந்து ரசிக்கர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் ரக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றமை அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் ரக் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் ரக் எதிர்வரும் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ’Two Two Two’ என்று ஆரம்பமாகும் என்றும் மேலதிக விபரங்கள் ஒரு சில நாள்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் ரக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் ரக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version