ezgif 1 ea71ab2b27
சினிமாபொழுதுபோக்கு

உன்னை நான் வலிமைமிக்க நபராக பார்க்கிறேன் – காதல் பொங்க மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்கி

Share

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், ‘ நீ இந்த ஆண்டு முழுமை அடைந்து விட்டாய் என நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ezgif 1 580a20b7e4

அந்த வாழ்த்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“நான் உன்னுடன் இருக்கும் 9வது பிறந்தநாள் இது. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு பிறந்த நாளும் எனக்கு ஸ்பெஷலானது, நினைவிற்குரியது மட்டுமல்ல வித்தியாசமானதும் கூட. ஆனால் இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இது நாம் இருவரும் கணவன் மனைவியாக, இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாகவும், நமது வாழ்க்கையை தொடங்கிய பின்னர் வருகின்ற முதல் பிறந்தநாள்!

மேலும் உன்னை நான் ஒரு வலிமைமிக்க நபராக பார்க்கிறேன்; அப்படித்தான் உன்னை எனக்கு தெரியும். உன்னுடைய வலிமை மற்றும் மன உறுதி , செய்கின்ற வேலைகளில் அர்ப்பணிப்பு குறித்து எனக்கு தெரியும். இந்த பல வருடங்களில் நான் உன்னை வித்தியாசமான ஒரு பெண்ணாக பார்க்கிறேன்.

மேலும் உன்னுடைய நேர்மையையைப் பார்த்து நான் வியக்கிறேன். ஆனால் இன்று உன்னை நான் ஒரு தாயாக பார்க்கையில், இதுவரை நீ அடைந்த உயரங்களில் இதுவே மிகவும் முழுமையான மற்றும் மகிழ்ச்சியான தருணமாக பார்க்கிறேன்.

நீ முழுமை அடைந்து விட்டாய்…. நீ சந்தோஷமாக காணப்படுகிறாய்! நீ அழகாகவும் காணப்படுகிறாய். குழந்தைகள் உன் முகத்தில் முத்தமிடுவதால் நீ இப்போதெல்லாம் மேக்கப் அணிவதில்லை. இவ்வளவு அழகை இத்தனை வருடங்களாக நான் பார்த்ததில்லை. மாறாத சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி உன்னுடைய முகத்தில் எப்போதும் இருக்கட்டும். இதற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது. நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம். கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும், ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்! என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்.

ezgif 1 1a39b0329a

#cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 15
சினிமா

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா...

15 16
சினிமா

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த...

12 16
சினிமா

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

13 15
சினிமா

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள்...