கிளாமர் காட்டும் கீர்த்தி!

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படம் மற்றும் இயக்குநர் செல்வராகவனின் சாணி காயிதம் என்பவற்றில் நடித்து முடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இந்த நிலையில், தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் திரைப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்திலும், நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் விளம்பர படம் ஒன்றில் தான் எடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் கீர்த்தி கொஞ்சம் கிளாமர் காண்பித்துள்ளதால் ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

keerthysuresh

Exit mobile version