1790686 3
சினிமாபொழுதுபோக்கு

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமண திகதி வெளியானது

Share

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற நவம்பர் 28- ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...