விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
இவர் நாயகியாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ப்ரெண்ஷிப்’.
தற்போது இந்த திரைப்படத்தின் ‘ட்ரெய்லர்’ வெளியாகி ரசிகர்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக தமிழில் ‘ப்ரெண்ஷிப்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார். ஆக்சன் சிங் அர்ஜூன் இந்தப் படத்தில் முக்கியவேடத்தில் நடித்துள்ளார்.
லாஸ்லியாவும் ஹர்பஜன் சிங்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக நடித்துள்ளனர்.
கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள் , ஆண் – பெண் இடையே நட்பு போன்றவற்றை பேசும் படமாக அமைந்துள்ளது இந்தப்படம். அந்த நண்பர்கள் கேங்கில் நடக்கும் விஷயங்கள் தான் பிரண்ட்ஷிப் படம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ‘ட்ரெய்லர்’ தற்போது ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
Leave a comment