dance
பொழுதுபோக்குசினிமா

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்!!

Share

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் இன்று மாலை உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரவாளங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை சிவசங்கர் மாஸ்டரின் மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவசங்கர் மாஸ்டர் திருடா திருடி, மகதீரா, பாகுபலி, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம், இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரின் சிகிச்சைக்கு உதவ சோனு சூட் உள்ளட்ட பிரபலங்கள் உதவ முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...