ezgif 3 325d4d86b1
சினிமாபொழுதுபோக்கு

எல்லாமே விஜய் அண்ணா.. பிறந்த நாளில் லோகேஷ் நெகிழ்ச்சி

Share

2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் தனது சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘எல்லாவற்றிற்கும் மிகவும் நன்றி விஜய் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...