Samantha Naga Chaitnya
பொழுதுபோக்குசினிமா

விவாகரத்து வதந்திக்கு முடிவு? – மெளனம் கலைத்த நாக சைதன்யா

Share

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இடையே விவாகரத்து நடைபெறவுள்ளது என அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்த தகவல் தொடர்பில் இருவரும் மெளனம் காத்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக நாக சைதன்யா, விவாகரத்து தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

“திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது.

அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேசமாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நான் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

samayam tamil

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...