சினிமாசெய்திகள்

விஜயகாந்த் சமாதி முன் மன்னிப்பு கேட்ட விஷால்.. நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா

Share
tamilni 159 scaled
Share

விஜயகாந்தின் மறைவு பெரும் துயரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்தனர்.

அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்பின் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடைய சமாதிக்கு வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

சூர்யா, ஜெயம் ரவி, அருண் விஜய் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் தனது நண்பரும், நடிகருமான ஆர்யாவுடன் இணைந்து வந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம் விஜயகாந்திற்கு ஏன் நடிகர் சங்கம் முறையாக அஞ்சலி செலுத்தவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால் ‘என்னால் இங்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்று கூட தெரியாமல் இருந்தேன். என்ன மன்னிச்சுடு சாமி என்ற வார்த்தையை தவிர வேறு என்ன நான் கேட்பது’ என கூறினார்.

இதன்பின் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என மக்கள் உட்பட பல பிரபலங்களின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் கொடுத்த விஷால் ‘கண்டிப்பாக நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அண்ணனின் பெயர் வைக்கப்படும். விஜயகாந்த் பெயர் வைக்கலாம் என்றால் யாரும் வேண்டாம் என சொல்லப்போவது இல்லை. இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் வராத’ என கூறினார் விஷால்.

மேலும் வருகிற 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு அஞ்சலி கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...