டிசம்பர் 28 அதிகாலை மூச்சுத் திணறல், கேப்டனின் கடைசி நிமிடம் என்ன ஆனது?- முதன்முறையாக கூறிய பிரேமலதா
கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா மக்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு பிரபலம்.
எப்போதுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர். இவருக்கு கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி முதன்முறையாக பேசியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.
2014ம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனை முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன்.
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றோம், அப்போது கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினோம்.
திடீரென 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும் ஆகாது வீட்டிற்கு சென்றுவிடுவோம் என்றேன், அவர் நான் கூறியதை கேட்டாலும் மூச்சுவிட சிரமப்பட்டார்.
மருத்துவர்கள் இந்த முறை மிகவும் கஷ்டம், அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில், விஜயகாந்த்தின் உயிர் பிரிந்துவிட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்துக்கு நடந்தது என பேசியுள்ளார்.