சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்ற படம் ‘டான்’.
சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கின்றார்.
அத்துடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி என பல நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கின்றார்.
இந்தப் படத்தின் ரிலிஸ் குறித்து தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைய இன்னும் 10 முதல் 15 நாள்கள் வரையே இருக்கின்றன எனவும் இந்த மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி இந்தப் படத்தை எதிர்வரும் டிசெம்பர் அல்லது ஜனவரியில் வெளியிட அதிக வாய்ப்புக்கள் உள்ளன என படக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ‘அயலான்’ திரைப்படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment