முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது படமொன்றில் சம்பளமே வாங்காது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி வசம் தற்போது, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘முகிழ்’, ‘விக்ரம்’, ‘கடைசி விவசாயி’ ‘மாமனிதன்’ , ‘மும்பைகார’;, ‘காந்தி டாக்ஸ்’ , ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என ஒரு நீண்ட பட்டியல் கொண்ட படங்கள் காணப்படுகின்றன.
இவை தவிர பொலிவூட் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு குறும்படத்திற்கான யோசனையை கூறியிருக்கின்றார் பாக்கியராஜ்.கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி.
அத்தோடு இந்தப் படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என விஜய் சேதுபதி கூறியிருப்பது ஸ்பெஷல் தகவல்.
இதைப்போலவே, இன்னும் நான்கு குறும்படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து அதை ஒரு ஆந்தாலஜி படமாக திரையரங்கத்திலோ, ஓடிடி தளத்திலோ வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம் பாக்யராஜ்.
Leave a comment