நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை கத்ரின்னா கைஃப் உடன் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு ’மேரி கிறிஸ்துமஸ்’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினுடைய படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் தினத்தில் மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாடல்களே இல்லாமல் வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உருவாகும் இந்த படம் மும்பை மற்றும் புனே பகுதியில் திரைப்படமாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#CinemaNews
Leave a comment