சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், ரசிகர்கள் குறித்துத் தனக்கு நடந்த அதிர்ச்சியான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தத் தகவல் அஜித் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பேட்டியில், ரசிகர்களின் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத துயரச் சம்பவம் ஒன்றைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
அவர் கூறியதாவது:’இது 2005ஆம் ஆண்டு நடந்தது. ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்குக் கைகொடுக்கும்போது பிளேடு வைத்து என் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் எனக்குக் கையில் ரத்தம் வருகிறது என்று தெரிந்தது.”
இந்த வைரல் பேட்டியில், அஜித் தனது ரசிகர் வட்டாரத்தில் நடந்த கரூர் துயர சம்பவம், சினிமா, கார் ரேஸ், தனது அடுத்த படமான AK 64 அப்டேட் மற்றும் குடும்பம் குறித்துப் பல விஷயங்கள் மனம் திறந்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.