பிச்சை எடுக்கிறேன்! – கதறியழுத நடிகை

vijaya lakshmi 2 copy 1280x853

ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில், அம்மா மற்றும் அண்ணி வேடங்களில்  நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில், பெங்களூரில் வசிக்கும் நடிகை விஜயலட்சுமி, பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் அழுதபடி வீடியோ பதிவிட்டிருந்தார்.

இதன்பின்னர்  அவரது வங்கிக்கணக்கில்  7 லட்சம் ரூபா வரை பண உதவி கிடைத்துள்ளது.

நடிகை விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடாத்தினார்.
எனது அம்மா இறந்தவுடன் என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை.  நண்பர்கள் அந்த சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை. கர்நாடகாவில் நான் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் நான் பிச்சை எடுத்து இருக்கிறேன்.  எனக்கு என்று யாரும் இல்லை, எனக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க கருத்து வெளியிட்டார்.

Exit mobile version