சினிமா
“கனவு காண்கிறேன்” – வைரலாகும் சமந்தாவின் பதிவு

நடிகை சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என இன்டகிராமில் பதிவிட்டுள்ளமை வைரலாகியுள்ளது.
பதிவில் ‘நான் உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் முதலில் என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இனிமேல் என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அலுமாரியை தூசு தட்ட வேண்டும். மதியம் வரை படுக்கையில் படுக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்ற விஷயங்களைப் பற்றி கனவு காண்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மற்றும் அமலா தம்பதிகளின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமது விவாகரத்து முடிவை இருவரும் வெளிப்படையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login