ஜெயம் ரவியுடன் இணைகிறார் ப்ரியா பவானி சங்கர்!
ஜெயம் ரவியுடன் இணைகிறார் ப்ரியா பவானி சங்கர்!
ஜெயம் ரவிதமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர்.
நேற்றையதினம் ஜெயம் ரவி தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில் அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தனது 28 ஆவது படத்தில் இணைகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தின் பூஜை சென்னையில் இடம்பெற்றுள்ளது. பூலோகம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கல்யாணுடன் இரண்டாவதுமுறையாக இணைந்துள்ளார் ஜெயம் ரவி.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார், சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார்.
சின்னத்திரையில் கலக்கிய ப்ரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளன என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.