Samantha
சினிமாபொழுதுபோக்கு

தேவரகொண்டாவுடன் காஷ்மீரில் பிறந்தநாள் கொண்டாட்டம்! – வாழ்த்து மழையில் சமந்தா

Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமந்தாவின் பிறந்தநாளை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சமந்தா.

சென்னை பெண்ணான சமந்தா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமானார். பின்னர் அதர்வா முரளியுடன் இணைந்து ‘பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

samatha

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் விஷால், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். புஷ்பா படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர். தற்போது சமந்தா நடிப்பில் ’சாகுந்தலம்’ ’யசோதா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதேவேளை, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா காஷ்மீரில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

samantha0

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பின்போதே தேவரகொண்டா உள்பட படக்குழுவினருடன் சமந்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Samantha

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...