சமையல் குறிப்புகள்
கொண்டைக்கடலை முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
முட்டை – 3
மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.
வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.
முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள். புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
#LifeStyle
You must be logged in to post a comment Login