வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடித்து வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்துவரும் நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தளபதி விஜய் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அண்மையில் சென்றமை நாம் அறிந்ததே.
இந்த நிலையில் மாஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள இசையமைப்பாளர் தமன், தற்போது ‘வாரிசு’ படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில நாட்கள் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment