காணொலிகள்
அம்மாவானார் காஜல் – குவியும் வாழ்த்துக்கள்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர்
காஜல் அகர்வால்.
தமிழில் பழனி திரைப்படம் மூலம் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்தவர். குறிப்பாக துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றவை.
நடிப்பில் பிசியாக இருந்த காஜல் அகர்வால் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்தில், காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு காஜல் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல், கர்ப்பமாக இருக்கும் காலத்தில், தனியாகவும், கணவருடன் சேர்ந்தும் பல போட்டோ சூட் நடத்தி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
தற்போது காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காஜல் அகர்வால் – கௌதம் கிச்சலு தம்பதிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
#Cinema
You must be logged in to post a comment Login