பீஸ்ட் திரைப்படத்தின் செக்கண்ட் சிங்கிள் ரக் வெளியாகி வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் திரைக்கு வர இருக்கிறது. பீஸ்ட். சன் பிக்சக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
ஏற்கனவே படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் ரக் அரபிக்குத்து வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பல சாதனைகளையும் புரிந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் செக்கண்ட் சிங்கிள் ரக் தொடர்பான புரமோ வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், இன்று செக்கண்ட் சிங்கிள் ரக் வெளியாகியுள்ளது.
பாடல் வெளியாகி சிறிது நேரத்திலேயே 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அனிருத் இசையில், கார்த்திக் வரிகளில் உருவாகிய ‘ஜாலியோ ஜிம்கானா’ என ஆரம்பிக்கும் இப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் ஜானி மாஸ்டர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த பாடல் பல தத்துவங்களையும், அட்வைஸ்களையும் கொண்டுள்ளது. உண்மையிலேயே மிக ஜாலியாகவே பாடலை பாடியுள்ளார் தளபதி.
ஜானி மாஸ்டரின் ‘ரெளடி பேபி’ மற்றும் ‘புட்ட பொம்மா’ பாடல்களைப் போலவே இந்த பாடலும் நடனத்தில் பட்டையை கிளப்புகிறது. அதுவும் நம்ம தளபதி நடனம் பற்றி சொல்லவா வேண்டும்?. குதிரை ஸ்டெப்பில் செம ஜாலியாகவும் சிம்பிளாகவும் நடனத்தில் பட்டையை கிளப்புகிறார் நம்ம தளபதி. அவருக்கு ஈடுகொடுத்து பூஜா ஹெக்டேயும் நடனத்தில் கலக்குகிறார்.
ரெண்டிங்கில் உள்ள அரபிக்குத்து பாடளுக்கு போட்டியாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இந்த பாடல் தற்போது தளபதி ரசிகர்களையும் சமூக வலைத்தள பக்கங்களையும் ஆக்டிவ் மோட்டில் வைத்துள்ளது.
#Cinema
Leave a comment