இன்றைய ராசிபலன் 9.01.2025, குரோதி வருடம் மார்கழி 26, வியாழக் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் செயலில் நிதானம் இருக்கும். தொழில் தொடர்பான சில மாற்றங்கள் பெரிய முன்னேற்றத்தை தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல் நல பிரச்சனைகள் தீரும். பண பரிவர்த்தனை கவனம் தேவை. வியாபாரத்தில் அதிக லாபத்தை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்து வேலைகளையும் கவனமாக செய்து முடிப்பது நல்லது. ஒரே நேரத்தில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது. இன்று எதிலும் தைரியமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிறரின் தாக்கத்தின் மூலம் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கடின உழைப்பிற்கேற்ற சிறப்பான பலனை பெறுவீர்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறீர்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் சிறப்பான செயல்பாட்டால் இலக்கை எளிதாக அடைவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம், விவேகத்தால் நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சில தடைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில மதிப்புமிக்க பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் புகழ் அதிகரிக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்தி செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டிய நாள. பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இதனால் எந்த செயலிலும் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உங்கள் பண செலவு அதிகரிக்கும். விரும்பாவிட்டாலும் கட்டாயத்தின் பெயரில் செலவு செய்ய வேண்டியது இருக்கும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பிரச்சனைகளை தீர்க்க போராட வேண்டியது இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் தேடி வரும். மனதில் உற்சாகம் பிறக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நிதிநிலை சற்று பின்னடைவு ஏற்படுத்தும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள். முக்கிய வேலைகளில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற சிறப்பான பலனை பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சகோதரர்களின் உதவி உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். காதல் வாழ்க்கையில் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். பண முதலீடு விஷயத்தில் சிறப்பான நன்மைகளை அடைவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவும். இன்று முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்று யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ, கோபப்படுவதோ தவிர்ப்பது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களில் முதலீடு செய்ய சிறப்பான நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெறலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று உடல் வலி, மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் கவலைகள் மனச்சோர்வைத் தரும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தர வாய்ப்புள்ளது.
- 2025 rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- new year rasi palan 2025
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today suntv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- zee tamil rasi palan