இலங்கைசெய்திகள்

சுலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

சுலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேல் மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே (Sulochana Gamage) உட்பட இரு சந்தேகநபர்களையும் தொடர்ந்து 17 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் (Colombo Magistrate’s Court) இன்றையதினம் (06.01.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொழும்பு டொரிங்டன் அவனியுவில் அமைந்துள்ள காணியொன்றை சுவீகரித்தமைக்காக உடனடியாக செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டில் ஒரு பகுதியை வழங்குவதற்காக தொண்ணூறு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளனர்

இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே மற்றும் மற்றுமொரு வர்த்தகர் ஆகியோரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...