Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

tamilnaadi 3 scaled

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான பலம் தரக்கூடிய நாள். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பணக்கசப்பு நீங்கும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையை முடிப்பதில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிநிலை முன்னேற்றத்தால் கடனை அடைப்பதில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களின் முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும். மக்களின் ஆதரவு பெருகும். உங்களின் இனிமையான பேச்சு அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். தாயின் உடல்நிலையில் சில பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. முதலீடு விஷயத்தில் நிபுணர்களின் உதவியைப் பெறுவது நல்லது. குடும்பத்துடன் கோயில், பூஜைகளில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள். அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீருவதோடு, சூழலும் சாதகமாக இருக்கும்.உங்கள் மாணவர்கள் எந்த போட்டியில் கலந்து கொண்டாலும், படிப்பு சார்ந்த விஷயத்திலும் வெற்றி பெறுவார்கள். இன்று பணம் முதலீடு தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் சந்திப்பும், நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய பணம் முதலீடு தொடர்பான விஷயத்தில் நல்ல பலன் தரக்கூடிய நாள். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் கௌரவம் அதிகரிக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நினைப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில், வியாபாரத்திற்காக புதிய திட்டங்கள் தொடங்க சாதகமான நாள். இன்று பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலும் முடிவை நீங்களே எடுத்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினரின் பதவி உயர்வு, சம்பள உயர்வு கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். இன்று தேவையற்ற கவலைகள் தொந்தரவு செய்யும். வாழ்க்கை துணைவரின் ஆதரவு குறைவாக கிடைக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய நாள். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான பண வரவுகள் உண்டாகும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் உங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க தயங்காதீர்கள். இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளுக்கு திருமணம், வேலை கிடைத்தல் என மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்கும். இன்று குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். கடந்த சில நாட்களாக வியாபாரத்தில் இருந்த பண பரிசோதனை பிரச்சனைகள் தீரும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதிநிலை பலப்படும். இன்று நினைத்ததை விட வரவு அதிகரிக்கும் என்பதால் சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு வேலையும் எச்சரிக்கையாகவும், திட்டமிட்டும் செய்வதும் நல்லது.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் சில மனவருத்தம் ஏற்படும். வியாபாரத்தில் பிறரிடம் வாங்கியுள்ள கடன் அடைக்க சிரமம் ஏற்படும். வணிகத்தில் சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கக்கூடிய நாள். உங்களின் முன்னேற்றத்தை கண்டு எதிரிகள் கூட புகழ்வார்கள். அரசாங்கத் திட்டங்கள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். இன்று உங்களின் பணத்தை சமூகப் பணி மற்றும் ஆன்மீக நிகழ்வுக்காக செலவிடுவீர்கள். இன்று நண்பர்கள், புதிதாக அறிமுகமான நண்பர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் முயற்சிகள் மூலம் சிறப்பான வெற்றியை பெறலாம். வணிகம் தொடர்பாக கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது, இன்று வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்கவும். இன்று விருந்தினர்களின் வருகை தொடர்பாக பணம் அதிகமாக செலவாகும். பிள்ளைகளின் படிப்பில் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும் நாள். எதிரிகளால் வியாபாரத்தில் சில நஷ்டம் ஏற்படலாம். இன்று அன்றாட செலவுகளை எளிதாக சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. அரசு வேலை தொடர்பான முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான படங்கள் கிடைக்கக்கூடிய நாள். பிறருக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு. உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று முக்கிய முடிவுகளை மனைவியுடன் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கவும். உடல்நலக் குறைவு தொடர்பாக உங்களின் பயணம் தள்ளி வைக்க நேரிடும். தந்தையின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...