இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தன லாபங்கள் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் மன சந்தோஷமும், திருப்தியும் இருக்கும். இன்று பங்கு சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். செலவுகள் குறையும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று மனத்திருப்தியும், மனதில் சந்தோஷமும் உண்டாகும். மாலை நேரத்தில் நற்செய்திகள் தேடி வரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நீங்கள் தெளிவான சிந்தனையுடன் முடிவெடுக்க முடியும். மனதில் இருக்கக்கூடிய பய உணர்வுகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறலாம். இன்று உங்களுக்கு லாபங்கள் நிறைந்ததாக இருக்கும். சகோதர, சகோதரிகளின் உறவுகள் மேம்படும். இன்று சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக அமைகிறது. விநாயகரின் வழிபாடு சிறந்தது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றிகள் உண்டாகும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இன்று புதிய வியாபார தொடக்கங்கள் நல்ல வெற்றியை தரும். இன்று இருசக்கர வாகனங்கள் வாங்குவது, மாற்றுவது தொடர்பாக நல்ல சூழல் நிலவும். குடும்ப சொத்து விவகாரங்கள் இன்று பேசி தீர்க்கப்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன பயம் நீங்கும். இன்று பல நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல விடை கிடைக்கும். இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பாடு செய்யக்கூடிய சூழல் இருக்கும். விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. பல நாட்களாக நீங்கள் முயற்சி செய்து, ஏமாந்து போன பண விஷயங்களில் வெற்றி உண்டாகும். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இன்று காலை வேளையில் அம்மன் வழிபாடு செய்யவும். அம்மனுக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்ய எடுத்துக் காரியத்தில் வெற்றி உண்டாகும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியிலேயே சந்திரன் மற்றும் கேது சேர்ந்திருப்பதால், பல நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நபர்களால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டு. பல மாதங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்களை இன்று செய்து முடிக்க முடியும். இன்று உங்களிடம் விருப்பங்கள் நிறைவேறும்.திருமண யோகங்கள் சிலருக்கு கை கூடும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வழக்குகள், விசாரணைகளில் வெற்றிகள் கிடைக்கும். பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற சில விஷயங்கள் நிறைவேறும். கடன் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பல நாள் கனவாக இருக்கும் வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும். இன்று காலை வேளையில் உங்களுக்கு நற்செய்திகளும் காத்திருக்கிறது. எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். என்று உங்களுக்கு நண்பர்கள் மூலமாக நன்மைகள் நடக்கும். இன்று வியாபாரம் தொடர்பாக கலவையான பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்களின் வரவுகளை மனதில் வைத்துக் கொண்டு செலவிடவும். விநாயகர் ஆலய வழிபாடுகள் சிறந்தது.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் உங்களுக்கு மனத் திருப்தி கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான பலன் காத்திருக்கிறது. காதலர்களுக்கு வெற்றியை தரக்கூடிய நாளாக இருக்கும். குழந்தையின் கல்வி தொடர்பாக கற்றுக் கவலை அடைவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகளை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உள்ளது குடும்பத்தில் உங்களின் பேச்சை இனிமையே கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை பாதிக்க செய்யும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் இன்று மனதிற்கு திருப்தியும், அலுவலகம் சார்ந்த விஷயங்களில் சிறு சிறு மன கிலேசம் வந்து செல்லும். உங்கள் வேலைகளில் பிரச்சனை தொடர்பாக குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வெற்றிகள் உண்டாகும்.இன்றைய நாளில் நீங்கள் குலதெய்வ பிரார்த்தனை செய்வது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மகத்தானதாக அமைகிறது. கும்ப ராகி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைவதால் நின்று பசு மாடுகளுக்கு உணவு அளிக்கவும். இன்று உங்கள் சொல் மற்றும் செயலில் கூடுதல் கவனம் தேவை. நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது அவசியம். அதன் மூலம் உங்களின் வேலைகளை முடிக்க முடியும். இளைய செலவுகள் இன்று தவிர்க்க முடியாததாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்குகள், விசாரணைகளில் வெற்றிகள் கிடைக்கும். இன்று பல நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நபர்கள் மூலம் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். இன்று நாளில் அன்னதானங்கள் செய்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் பற்றாக்குறை சந்திக்க நேரிடும். இன்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் முன் சிந்தித்து செயல்படவும். இன்று குரு பகவான் வழிபாடு செய்வது நன்மைதான்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- december rasi palan
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- nalaiya rasi palan
- new year rasi palan
- new year rasi palan 2024
- pugazh media rasi palan
- puthandu rasi palan 2024
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- suntv rasi palan
- Today Rasi Palan
- Today Rasi Palan Tamil
- zee tamil rasi palan today