dcc
தொழில்நுட்பம்

புது குளிர்சாதன பெட்டி அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம்! இத்தனை அம்சங்கள் உள்ளதா?

Share

எல்ஜி நிறுவனம் எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் புதிய குளிர்சாதன பெட்டி ஒன்றை அறிமுகம் செய்தது.

இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில்  அறிமுகமாகி இருக்கிறது.

இந்த குளிர்சாதன பெட்டியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றியும் எந்த தகவலும் இல்லை

இந்த குளிர்சாதன பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுவது, வித்தியாசமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

dcc

  • இவற்றை கொண்டு 22 நிறங்களில் ஒன்றை மேலே உள்ள கதவுகளுக்கும், லோயர் பேனல்களில் 19 நிறங்களில் ஒன்றையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது
  • எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஃப்ரிட்ஜ்-ஐ ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு மியூசிக் ஸ்டிரீமிங் செய்யலாம்.
  • தங்களின் ஸ்மார்ட்போனை இணைத்து குளிர்சாதன பெட்டியின் நிறத்தை விரும்பிய நேரத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கி இருக்கிறது.
  • குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவைகளுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும். இவ்வாறு செய்யும் போது குளிர்சாதன பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும். பேனல்கள் ஆப் செய்து விட்டால், லக்ஸ் கிரே மற்றும் லக்ஸ் வைட் டிசைனில் காட்சியளிக்கும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...