ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நேற்று நிறைவுற்றது.
சிறப்பு விற்பனை மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளை படைத்தது என ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.
விற்பனையை வெற்றிபெற செய்தமைக்காக, வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் நன்றி தெரிவித்தது.
மேலும் வாரம் முழுக்க நடைபெற்ற சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ. 11,500 கோடியை சேமித்துள்ளனர்.
இதுதவிர விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினால்
ஆயிரம் புர்ஜ் கலிபா கட்டிடங்களை விட உயரமாக இருக்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
சிறப்பு விற்பனையில் மொத்தம் 3.75 லட்சம் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த விற்பனையின் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒரு வாட்ச் விற்பனையாகி இருக்கிறது.
ஒரு மணி நேரத்தில் விற்பனையான தேநீர் தூள் கொண்டு 50 லட்சம் கோப்பை தேநீர் போட முடியும்.
மேலும் 24 மணி நேரத்தில் 1.2 லட்சம் சாக்லேட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
சிறப்பு விற்பனையின் போது விற்ற ஷூ பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் இமய மலையை விட 100 மடங்கு உயரமாக இருக்கும்.
இதில் விற்பனையான எண்ணெய் கொண்டு 9 லட்சம் பிரென்ச் பிரைஸ் செய்ய முடியும்.
Leave a comment