y
தொழில்நுட்பம்

Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம்! என்ன விலையில் தெரியுமா?

Share

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

இது சர்வதேச சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்திய சந்தையில் ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் கிரீன் மற்றும் மிஸ்டிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் செப்டம்பர் 14 ஆம் திகதி விற்பனைக்கு வருகிறது.

y

சிறப்பம்சம்

  • புதிய ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 50MP பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 2408×1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டிருக்கிறது.
  • இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்டு அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
  • இது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது முந்தைய பிராசஸரை விட 10 சதவீதம் மேம்பட்ட GPU திறன் மற்றும் 15 சதவீதம் மேம்பட்ட CPU திறன் கொண்டிருக்கிறது.
  • இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

 

#smartPhone

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...