இந்தியா பறக்கும் காரை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது இந்தியா.
சென்னையிலுள்ள விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம், ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய கார் மாதிரியையடுத்து, ஆசியாவிலேயே பறக்கும் காரை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா தனக்கு சொந்தமாக்கியுள்ளது.
குறித்த காரின் மாதிரியானது, லண்டனில் நடைபெற்ற ஹெலிடெக் விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பறக்கும் காரின் டிஜிட்டல் ப்ரோடோ டைப் காணொலியை அந் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அக் காணொலியில், காரின் அமைப்பு மிகத் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.அதன் கதவுகள் இறக்கையைப் போல திறக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்ச்சியாக மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
3 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறனுள்ள இக் காரானது, இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் கொண்டு இயங்கும் எனவும், பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Leave a comment