download 9 1 9
தொழில்நுட்பம்

டுவிட்டருக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம்!

Share

டுவிட்டருக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம்!

டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை.

இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

“லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறேன்.” “இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்,” என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். என்பிசியுனிவர்சல் நிறுவனத்தில் இருந்து லிண்டா வெளியேறுவதாக அந்நிறுவனம் இன்று காலை அறிவித்து இருந்தது. எனினும், இதற்கு முன்பிருந்தே லிண்டா டுவிட்டர் நிறுவனத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

#Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...