download 3 1 11
தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனை கேமராவாக மாற்றும் சாதனம் ரெண்டிங்!

Share

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி சமீபத்தில் ரெட்மி நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிறுவனம் தற்போது சியோமி 13 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தனது வெய்போ அக்கவுண்டில் புதிய கேமரா சாதனம் ஒன்றின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த சாதனம் ஸ்மார்ட்போனை வழக்கமான கேமரா போன்று பயன்படுத்தும் வசதியை வழங்கும் என அதன் தோற்றத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. புதிய சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சியோமி நிறுவனர் வெளியிட்டு இருக்கும் சாதனம் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தும் என தெரிகிறது. லெய் ஜூன் வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் உள்ள கேமரா க்ரிப் சாதனம் கொண்டு சியோமி 13 அல்ட்ரா மாடலை பயனர்கள் வழக்கமான கேமராவுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது.

ஸ்மார்ட்போன் கேமரா விஷயத்தில் சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி புதிய சாதனம் நான்கு 50MP பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 1 இன்ச் அளவில் சோனி IMX989 சென்சாருடன் வேரியபில் அப்ரெச்சர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது டீசரில் இடம்பெற்று இருக்கும் கேமரா க்ரிப்-இல் பிரத்யேக ஷட்டர் பட்டன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

#Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...