271611031 10228370760357296 1607834306009377185 n
கட்டுரைதொழில்நுட்பம்விஞ்ஞானம்

நிலவின் இருண்ட பக்கத்தில் வேற்றுக் கிரகவாசிகள்? – உறுதிப்படுத்தியது சீன விண்கலம்!

Share

நிலாவில் பூமிக்கு எப்போதும் தெரியாத இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை சீனாவின்”யூட்டு -2″ லூனர் விண்கலம் (Yutu-2 lunar rover) அங்கு இறங்கி ஆய்வு செய்துவருகிறது.

சந்திரனில் தொலைவில் அதன் மர்மப்பக்கத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது பரிசோதனை முயற்சி இதுவாகும். கடந்த நவம்பரில்”யூட்டு – 2″ விண்கலம் அனுப்பியிருந்த படம் ஒன்றில் நிலாவில்மிகத் தொலைவில் சிறிய கன சதுரக் கட்டி வடிவிலான ஆர்வத்துக்குரிய பொருள் ஒன்று காணப்பட்டது. அந்த மர்ம உருவம் என்னவாக இருக்கக் கூடும் என்று பல விதமான ஊகங்கள் விண்வெளி அறிவியல் வட்டாரங்களில் நிலவியது.

அது ஒரு சிறிய குடில் போன்று தோன்றியதால் சீன அறிவியலாளர்கள் அதனை”சந்திரக் குடிசை” (Moon Hut) என்று அழைத்தனர். வேற்றுக் கிரக உயிரினங்கள் பற்றிய புனைகதைகளை நம்புவோர் அதனை “மர்மக்குடிசை” (“mysterious hut”) என்றும்”வேற்றுக் கிரகவாசிகளது குடில்” (Alien Hut’) எனவும் கற்பனை செய்தனர்.

இது தொடர்பான பல செய்திகள் கடந்த நவம்பர் மாதம் முதல் விண்வெளி அறிவியல் துறை செய்தியாளர்களால் வெளியிடப்பட்டு வந்தன. மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்காக சீன விஞ்ஞானிகள் “யூட்டு”விண்கலத்தை அந்த இடத்துக்கு நெருக்கமாக அனுப்பி மேலும் தெளிவான படங்களை தற்சமயம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

உலக கவனத்தை ஈர்த்த அந்த மர்ம உருவம் ஒரு தனித்த கற்பாறை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. முயல் ஒன்றின் சாயலில் அது தென்படுவதால் சீன அறிவியலாளர்கள் அதற்கு “jade rabbit”எனப் பெயரிட்டுள்
ளனர்.

நிலாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற யூட்டு – 2 கலம் கடந்த 2019 இல் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தினால்(China National Space Administration)அங்கு தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

271589427 10228370760677304 6311087081778148114 n

#Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...