அரசியல்கட்டுரை

29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. கையில் நாடு

WhatsApp Image 2022 07 21 at 11.22.01 AM
Share

சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் 1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் பிரதமர் ஆட்சி (வெஸ்ட்மினிஸ்டர்) முறைமையே இருந்தது.

1982 இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் ஜே.ஆர். ஜயவர்தன வெற்றிபெற்றார்.

1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் ரணசிங்க பிரேமதாச வெற்றிபெற்று, 2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1993 இல் பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், ஐ.தே.க. ஆட்சியில் பிரதமராக இருந்த டிபி விஜேதுங்க, நாடாளுமன்றம் ஊடாக – வாக்கெடுப்பின்றி, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்.

அதன்பின்னர் 1994, 1999, 2005, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர்.

ஐ.தே.கவின் ஆசியுடன் 2015 இல் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். எனினும், அவர் ஐ.தே.கவின் அங்கத்துவத்தை பெறவில்லை. சுதந்திரக்கட்சி உறுப்பினராகவே செயற்பட்டார்.

2019 இல் மொட்டு கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். 2005 இற்கு பிறகே 2019 இல்தான் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் (சஜித்).

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதால், நாடாளுமன்றம் ஊடாக 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு 134 எம்.பிக்களின் ஆதரவு கிட்டியது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...