kodikamam
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

Share

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான நவர்ணன் எனும் இளைஞன் கடந்த 14ம் திகதி இரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகமுள்ளது என அவரது பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதவான் யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியினூடாக மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மரண விசாரணைகளில் குறித்த இளைஞன் விபத்தின்போது இதயம் வெடித்தே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...