rtjy 110 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதியாக தயாராகும் பிரபல வர்த்தகர்

Share

அடுத்த ஜனாதிபதியாக தயாராகும் பிரபல வர்த்தகர்

நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.

ஆனால் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலதிகத் தகவல்களைத் தெரிவித்த தம்மிக்க பெரேரா,

பெரும்பான்மைக் கட்சிகள் தாம் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் இணக்கம் காணும் பட்சத்தில் அது தனது தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் உந்துதலாக அமையும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து களமிறங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக மாத்திரம் தெரிவித்தார்.

அரசியல் திட்டத்தில் ஒரு படியாக கல்வித் திட்டம் தொடங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியபோது, ​​இளைஞர் சமுதாயத்தை அறிவாற்றலுடன் செயற்படவும் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் டி.பி. கல்வி தொடங்கியது.

இலங்கையில் 55 லட்சம் குடும்பங்களில் 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பிள்ளைகள் கல்விப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...