Karuppu puncai
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Share

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...