sri lanka curfew
இலங்கைசெய்திகள்

ஒக்ரோபர் வரை ஊரடங்கை நீடிக்குக! – மருத்துவ சங்கம் கோரிக்கை

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை காணத் தொடங்கியுள்ளது.

எனினும் நாடு சிவப்பு வலயத்திலிருந்து  மீளவில்லை. தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர்.

ஒட்டு மொத்த பலன்களையும் பெற வேண்டுமாயின் இந்த பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம் மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்தால் 8 ஆயிரத்து 500 உயிர்களைக் காப்பாற்றலாம். ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

தற்போதைய கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் நோய் தீவிரமடைந்து பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...