4 1 scaled
உலகம்செய்திகள்

வீடு பற்றாக்குறைக்காக வெளிநாட்டு மாணவர்கள் மீது கை வைக்க திட்டமிட்ட கனேடிய அமைச்சர்

Share

வீடு பற்றாக்குறைக்காக வெளிநாட்டு மாணவர்கள் மீது கை வைக்க திட்டமிட்ட கனேடிய அமைச்சர்

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறிய கனடா அமைச்சர் ஒருவர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்று கூறிய அமைச்சர்
கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

சமீபத்திய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு, வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, அதை சமாளிக்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். கனடாவில் நிலவும் வீடு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்வதற்காக சர்வதேச மாணவர்களின் என்ணிக்கையைக் கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், நிதர்சனம் என்னவென்றால், கனடா மட்டுமல்ல, ஜேர்மனி முதலான பல நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும் கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

உலகமெங்கும், பல நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பணி ஓய்வு பெறுகிறார்கள் பலர். ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு தகுதிபடைத்த இளைஞர்கள் இல்லை.

ஆக, பல நாடுகள் பணியிடங்களில் நிலவும் காலியிடங்களை நிரப்ப திணறிவருகின்றன. கனடாவும் அப்படித்தான்.

Sean Fraser முன்பு புலம்பெயர்தல் அமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம், கனடாவுக்கு புலம்பெயர்வோரை வரவேற்பது குறித்தே பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.

சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குத் தேவை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரது பேச்சே மாறிவிட்டது.

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார் அவர்.

ஆனால், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து, கனடாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் அவசியம் என்று மீண்டும் கூறியுள்ளார் Sean Fraser.

அமைச்சரின் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை!

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...