24 66063257cf64e
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

Share

இலங்கையின் சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைக்க கோரிக்கை

இலங்கை தனது 12 பில்லியன் டொலருக்கான சர்வதேச இறையான்மை பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

டொலரின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட நிலையிலேயே கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கான புதிய அடையாளமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2022 மே மாதத்தில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் இந்த வாரம், சர்வதேச இறையான்மை பத்திரப்பதிவுதாரர்களுடன் முறையான மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பின் பின்னணியில், தற்போதுள்ள பத்திரங்களை அமெரிக்க டொலர்களில் புதிய பத்திரங்களுக்கு அதே நாணயத்தில் மாற்றுவதற்கான நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024 ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கையின் நிதியமைச்சகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...