இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு - எழுந்த குற்றச்சாட்டு!
இலங்கைசெய்திகள்

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு – எழுந்த குற்றச்சாட்டு!

Share

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு – எழுந்த குற்றச்சாட்டு!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ். எஸ் .நிமால்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை கிரீன் வீதியில் உள்ள மண்டபமொன்றில் இன்று (30.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாங்கள் தற்பொழுதும் நிர்வாக குழுவாகவே இயங்கி வருகின்றோம். மேலும், ஒரு குழு இடைக்கால குழுவை அமைத்து செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

எங்களுக்கு அறிவித்தல் விடாமல் அவர்கள் நிர்வாகத்தை தெரிவு செய்து காரியாலயத்தை கைப்பற்றி செயற்பட்டு கொண்டு வகிறது.

இதேவேளை ஒவ்வொரு மாவட்ட கிளைகளிலும் கிளை உத்தியோகத்தர்களின் உதவியுடன் வங்கி விபரங்களை மாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், குறித்த இடைக்கால நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...