kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

Share

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது, விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களிலும் பெருமளவிலான பட்டத்தினுடைய நூல்கள் சிக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தின் எஞ்சின் அல்லது அதன் செயல்பாட்டுத் தொகுதிக்குள் பட்டத்து நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ நுழைந்தால், முழு விமானமும் விபத்துக்குள்ளாகும் அபாயம் காணப்படுவதாகத் கூறியுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் பட்டம் விடும் காலப்பகுதியுடன், நாட்டின் விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளமையால், விமானங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மேலும், உலகளவில் விமான விபத்துக்கள் ஏற்படுவதற்கு விமான ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடித் தடையாகவும் அமைகிறது.

அதன்படி கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அநுராதபுரம், பலாலி, கத்துக்குருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சுற்றி அதிகளவில் பட்டம் விடுவது தற்போது அதிக ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விமானப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றி வசிக்கும் மக்கள் அத்தகைய வலயங்களுக்குள் பட்டம் விடுவதைத் முழுமையாகத் தவிர்க்குமாறு விமானப்படை குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...