துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் இடம்பெற்றுள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.