QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

Share

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போது சங்கத்தின் பிரதிநிதிகள் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால், 50 ரூபா வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள QR முறையும், எரிபொருள் விநியோகத்திற்கான வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கான சேவை வழங்கியமைக்கான சேவை கட்டணம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த நிலையில், நாட்டில் எரிபொருள் விநியோகத் துறையில் உள்ள சினொபெக், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் போன்ற நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...