பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர்
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர்

Share

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர்

திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு (12.07.2023) குறித்த சந்தேக நபர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்மாந்தோட்டை- உதாகம்மான பகுதியில் வசித்து வரும் அந்தோணி பதுகே திலின பிரசாத் (34வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்திற்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு வருவதாக திருகோணமலை பிராந்திய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை செய்த போது கடந்த இரண்டு வருடங்களாக திருகோணமலை பிரதேசத்திற்கு அம்மாந்தோட்டை- பிரதேசத்திலிருந்து ஹெரோயின் போதை பொருளை கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், புலன் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...