del
செய்திகள்இலங்கை

கிழக்கை மிரட்டும் டெல்டா – கல்முனையில் 95 வீதம் தொற்று!!

Share

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டன.

அங்கு பரிசோதனை செய்யப்பட்ட  18 மாதிரிகளில் 17 கொரோனா டெல்டா வைரஸ் தொற்றும் ஒரு கொரோனா அல்பா வைரஸ் தொற்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சறுத்தலானதுமாகும்.

எனவே மக்கள் நிலைமையைக்  கருத்தில்கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...